தமிழ் சினிமாவில் இன்று பிரபல இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத். ஒரே நேரத்தில் ரஜினி, கமல், விஜய், அஜித், ஆகிய சூப்பர் ஸ்டார் படங்களுக்கு எல்லாம் இசையமைத்து வருகிறார். 80 களில் இளையராஜாவுக்கு மட்டுமே இதுபோல அமைந்தது என்பது அனைவரும் அறிந்ததே.
இசையமைப்பில் உச்சத்தில் இருந்தாலும், அனிருத் பற்றி பல காதல் கிசுகிசுக்களும் பரவி வருகின்றன. முதலில் பாடகி மற்றும் நடிகையான ஆண்ட்ரியாவை அவர் காதலிப்பதாக தகவல்கள் பரவின. இருவரும் நெருக்கமாக முத்தமிட்டுக் கொண்டிருக்கும் புகைப்படமும் இணையத்தில் வைரல் ஆனது.

அதன் பின்னர் சமீபகாலமாக நடிகை கீர்த்தி சுரேஷை காதலித்து வருவதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் வதந்திகள், பரவ அதை கீர்த்தி சுரேஷின் தந்தை மறுத்துள்ளார்.
இந்நிலையில் இப்போது அனிருத் பிரபல தயாரிப்பாளர் ஒருவரின் மகளைதான் தற்போது டேட்டிங் செய்துவருவதாகவும், விரைவில் அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் அந்த பெண் யாரென்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.
