Thursday, July 30, 2026
Home > Cinema > ’என் படங்கள என் பசங்க பாத்தாங்களா?… அந்த வயசுல கிளுகிளுப்பு இருந்துச்சு’ ஷகீலாவின் சக நடிகர் விஜய் பகிர்ந்த பகீர் தகவல்கள்!

’என் படங்கள என் பசங்க பாத்தாங்களா?… அந்த வயசுல கிளுகிளுப்பு இருந்துச்சு’ ஷகீலாவின் சக நடிகர் விஜய் பகிர்ந்த பகீர் தகவல்கள்!

80 கள் மற்றும் 90 களில் தமிழ் மற்றும் மலையாள பி கிரேட் படங்கள் அதிகளவில் வெளியாக ஆரம்பித்தன. இந்த படங்களை உருவாக்குவதில் மலையாள சினிமா முன்னணி கேந்திரமாக இருந்தது. இப்படிப்பட்ட படங்களில் ஷகீலா, சில்க் ஸ்மிதா போன்ற நமக்கு நன்கு தெரிந்த நடிகர்கள் கூட நடித்திருந்தனர்.

இதில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான ஷகீலாதான். கவுண்டமணி செந்திலோடு நகைச்சுவை காட்சிகளில் நடித்து வந்த அவர் திடீரென மலையாள செக்ஸ் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதில் பெரும்புகழையும் சம்பாதித்தார். இதனால் ஷகீலா படங்கள் என்று ஒரு தனி மார்க்கெட்டையே தனக்கு உருவாக்கிக் கொண்டார்.

இவரின் வளர்ச்சி அப்போது மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டார்களாக இருந்த மம்மூட்டி, மோகன்லால் ஆகியோருக்கு போட்டியாக அமைந்தது என சொல்லப்படுவதுண்டு. அந்தளவுக்கு ஷகீலா படங்களுக்கு வரவேற்புக் கிடைத்துள்ளது. ஒரு கட்டத்தில் போர்னோகிராபி என்பது இணையம் வந்த பின்னர் வெகுசாதாரணம் ஆகிவிட்ட நிலையில் இப்போது பி கிரேட் படங்களின் தேவை இலலாமல் போய்விட்டது.

ஷகீலாவும் அந்த துறையில் இருந்து விலகி இப்போது படங்களில் நடிப்பது இணையச் சேனல்களில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது என பிஸியாகியுள்ளார். இந்நிலையில் தன்னுடைய நிகழ்ச்சி ஒன்றில் பி கிரேட் படங்களில் தன்னுடன் நடித்த சக நடிகரான வெற்றி விஜய்யை நேர்காணல் செய்துள்ளார். அதில் அவர் தான் எப்படி இந்த உலகுக்குள் வந்தேன் என்பது குறித்து பேசியுள்ளார்.

அதில் “நான் அப்போது பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டேன். டெலிபோன் பில் கூட கட்டமுடியவில்லை. அந்த நேரத்தில் இந்த மாதிரி படங்களில் நடிக்க என்னை அழைத்தார்கள். சம்பளம் 10000 என்றார்கள். அப்போதெல்லாம் இந்த தொகை பெரிய தொகை. அதுமட்டுமில்லாமல் அந்த வயதில் இதுபோன்ற படங்களில் நடிப்பது, பெண்களுடன் இருப்பது எல்லாம் ஒருவிதமான கிறக்கத்தைத் தந்தது. அந்த வயது அப்படிப்பட்டதுதான். அதனாலும்தான் நடித்தேன்.

ஆனால் நான் அந்த படங்களில் நடித்ததால் சினிமாவில் என்னால் பெரிய ஆளாக வரமுடியவில்லை. இதுபற்றி ராதாரவி அண்ணனே என்னிடம் பேசி வருத்தப்பட்டார். ஆனால் இப்போதும் நான் அந்த படங்களில் நடித்தற்காக வருத்தப்படவில்லை. இப்போது என் படங்கள் எல்லாம் யுடியூபில் கிடைக்கின்றன. அதையெல்லாம் என் குழந்தைகள் பார்த்தார்களா எனத் தெரியவில்லை. அவர்களும் அதுபற்றி எதுவும் பேசுவதில்லை. நானும் பேசுவதில்லை” எனக் கூறியுள்ளார்.