Saturday, May 18, 2024
Home > Cinema > அஜித்துக்கு வில்லனாக தனுஷ்… கொக்கி போடும் விக்னேஷ் சிவன் !

அஜித்துக்கு வில்லனாக தனுஷ்… கொக்கி போடும் விக்னேஷ் சிவன் !

துணிவு படத்தை முடித்ததும் அஜித் அடுத்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் 62 என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க, அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் அஜித்துடன் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் பற்றிய எந்த விவரமும் அறிவிக்கப்படவில்லை.

`

இந்நிலையில் படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிப்பார் என எதிர்பார்க்கபப்ட்ட நிலையில் இப்போது திரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் விக்னேஷ் சிவனுக்கு கிடைக்கவே முக்கியக் காரணமாக இருந்தவர் நயன்தாராதான். ஆனால் அவருக்கு பதிலாக திரிஷாவை ஹீரோயின் ஆக்கும் இந்த முடிவு ஏன் என்பது தெரியவில்லை.

```
```

இந்நிலையில் இப்போது படத்தில்  வில்லனாக தனுஷை நடிக்க வைக்க விக்னேஷ் சிவன் விரும்புவதாகவும், அதற்காக பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.