Monday, May 20, 2024
Home > Cinema > சினிமாவுக்கு ரெண்டு வருடம் பிரேக் விடப்போகும் அஜித்…. ஏன் தெரியுமா?

சினிமாவுக்கு ரெண்டு வருடம் பிரேக் விடப்போகும் அஜித்…. ஏன் தெரியுமா?

நடிகர் அஜித் தனது அடுத்த படத்தை முடித்ததும் இரண்டு ஆண்டுகள் சினிமாவிற்கு பிரேக் விட போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

நடிகர் அஜித் தனது 61 ஆவது படமான துணிவு படத்தில் இப்போது கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தை ஹெச் வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். பல கட்டங்களாக நடந்து வரும் படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. பொங்கலுக்கு இந்த படம் விஜய்யின் வாரிசு திரைப்படத்தோடு வெளியாக உள்ளது.

`

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தன்னுடைய ரசிகர் மன்றங்களைக் கலைத்த அஜித், அதன் பிறகு ஊடகங்களை சந்திப்பதையும் நிறுத்தினார் . தனக்கென்ற ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே வாழ்ந்து வருகின்றார். அவருக்கும் ரசிகர்களுக்கும் இடையே உள்ள ஒரே தொடர்பாக அவரின் படங்கள் மட்டுமே அமைந்துள்ளன.

இந்நிலையில் சமீபகாலமாக இரு சக்கரவாகனத்தில் தன்னுடைய குழுவினரோடு இந்தியா மற்றும் பல வெளிநாடுகளில் பைக் பயணம் செய்து வருகிறார். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தன.

```
```

இந்நிலையில் அஜித், அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடித்து முடித்ததும், சுமார் இரண்டு ஆண்டுகள் திடமிட்டு உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளுக்கு இரு சக்கரவாகனத்தில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளாராம்.