Thursday, May 14, 2026
Home > Cinema > துணிவு படத்தின் கிராபிக்ஸ் பணிகள் தாமதம்… கடுப்பான அஜித்!

துணிவு படத்தின் கிராபிக்ஸ் பணிகள் தாமதம்… கடுப்பான அஜித்!

மூன்றாவது முறையாக அஜித் ஹெச் வினோத் கூட்டணி துணிவு படத்தில் இணைந்துள்ளனர். நடிகர் அஜித் தனது 61 ஆவது படமான துணிவு படத்தில் இப்போது கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தை ஹெச் வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். பல கட்டங்களாக நடந்து வரும் படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன் மற்றும் பிக்பாஸ் ஆமீர் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ள நிலையில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. துணிவு படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி வெளியிடுகிறது.இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

படத்தில் நிறைய கிராபிக்ஸ் பணிகள் செய்யவேண்டிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதற்கான பணிகள் தற்போது நடந்து வருகின்றன. ஆனால் பணிகள் எதிர்பார்த்தததை விட பொறுமையாக நகர, அஜித் இது சம்மந்தமாக கோபத்தை வெளிப்படுத்தி உள்ளாராம். மேலும் பணிகளை விரைவாக முடிக்க, கிராபிக்ஸ் பணிகள் மேலும் சில நிறுவனங்களுக்கும் பிரித்துக் கொடுக்க சொல்லி உள்ளாராம்.