தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளிவந்த “என்னை அறிந்தால்” படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை பார்வதி நாயர். அந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார். 2012 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான “பாப்பின்சு” படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

தொடர்ந்து பல மலையாள படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.இதை தொடர்ந்து கன்னட சினிமாவில் “ஸ்டோரி கதே” படத்தின் மூலம் அறிமுகமானவர்.பின்னர் 2014 ஆண்டு “நிமிர்ந்து நில்” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.அதில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் நகைகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் திருடு போயுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் தன்னுடைய வீட்டில் வேலை செய்துள்ள சுபாஷ் சந்திர போஸ் என்பவர்தான் திருடியுள்ளதாக புகாரளித்து இருந்தார்.

இந்நிலையில் தேனாம்பேட்டையில் சுபாஷ் சந்திரபோஸ் அளித்துள்ள புகாரில் “பார்வதி நாயர், வீட்டில் பல ஆண் நண்பர்களுடன் இணைந்து மது விருந்து நடத்தியதை நான் தெரிந்துகொண்டதால், அதை நான் வெளியே சொல்லிவிடுவேன் என நினைத்து என்னை அவமானப்படுத்தி வந்தார். என் மீது எச்சில் துப்பி, என்னை அடித்து துன்புறுத்தினார்” என பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் சுபாஷ் தன்னைப் பற்றி போலியான தகவல்களைப் பரப்புவதாகவும், அவர் மீது சட்டபடியான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் பார்வதி நாயர் வழக்கறிஞர் மூலமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
