Sunday, May 19, 2024
Home > Cinema > தில் ராஜு அப்ப செஞ்சது இப்ப சிக்கல உருவாக்குது… வாரிசு படத்துக்கு தெலுங்கில் எழும் எதிர்ப்பு

தில் ராஜு அப்ப செஞ்சது இப்ப சிக்கல உருவாக்குது… வாரிசு படத்துக்கு தெலுங்கில் எழும் எதிர்ப்பு

விஜய் நடிக்கும் வாரிசு  படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க, தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு உள்ளிட்ட ஏராளமானோர் நடிக்க, தமன் இசையமைக்கிறார். முதல் முதலாக விஜய் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். தற்போது தமிழ் சினிமாவில் உருவாகி வரும் அதிக பட்ஜெட் கொண்ட படமாக வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படம் தெலுங்கிலும் வார்சாடு என்ற பெயரில் உருவாகி வருகிறது.

`

இந்நிலையில் சங்கராந்திக்கு இந்த படம் தெலுங்கில் ரிலீஸ் செய்ய திட்டமிட்ட நிலையில், இப்போது தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென கடிதம் வெளியிட்டுள்ளது.

```
```

கடந்த 2019 ஆம் ஆண்டு இதே போல பொங்கலுக்கு பேட்ட படம் தெலுங்கில் ரிலீஸ் ஆவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்போதைய தயாரிப்பாளர் சங்க தலைவர் தில் ராஜுதான் மகாசங்கராந்தி மற்றும் தசரா போன்ற பண்டிகை நாட்களில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை இயற்றினார். ஆனால் அவரின் அந்த முடிவு இப்போது வாரிசு படத்துக்கு எதிராக வந்து நிற்கிறது.