Friday, August 21, 2026
Home > Cinema > “மொபைலில் அது எடுபடாது…” பிரபஸின் ஆதிபுருஷ் டீசர் ட்ரோல்களுக்கு இயக்குனர் பதில்

“மொபைலில் அது எடுபடாது…” பிரபஸின் ஆதிபுருஷ் டீசர் ட்ரோல்களுக்கு இயக்குனர் பதில்

பிரபாஸ் நடிக்கும் அடுத்த பேன் இந்தியா திரைப்படம் ஆதிபுருஷ் ஜனவரி மாதம் ரிலீஸாக உள்ளது.

பாகுபலி படங்களின் வெற்றிக்குப் பிறகு பேன் இந்தியா ஹீரோவான பிரபாஸ் அதன் பின்னர் நடித்த சாஹோ மற்றும் ராதே ஷ்யாம் ஆகிய படங்கள் அட்டர் ப்ளாப் ஆகின. ஆனாலும் அவருக்கு இன்னமும் பேன் இந்தியா லெவலில் மார்க்கெட் உள்ளதாக பாலிவுட் இயக்குனர்கள் தொடர்ந்து அவரிடம் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் இப்போது பிரபல பாலிவுட் இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ராமாயணத்தை மையப்படுத்திய கதையான ஆதிபுருஷ் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சைஃப் அலிகான் மற்றும் கிரீத்தி சனோன் ராவணனன் மற்றும் சீதா கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.  

மோஷன் கேப்ச்சர் தொழில்நுட்ப முறையைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த திரைப்படம் வரும் ஜனவரி மாதம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் அயோத்தியில் வைத்து ரிலீஸ் செய்யப்பட்டது. டீசர் வெளியானது முதல் கார்ட்டூன் போல இருப்பதாக ட்ரோல்கள் பரவின.

இந்நிலையில் அதற்கு இயக்குனர் ஓம் ராவத் பதிலளித்துள்ளார். அதில் “இந்த திரைப்படம் ஐமேக்ஸ் போன்ற பெரிய திரைக்காக உருவாக்கப்பட்டது. அதை மொபைலில் பார்த்தால் அந்த அனுபவம் கிடைக்காது. ஆனால் அதிகளவில் ரசிகர்களை சென்றடைய இணையத்தில் டீசர் மற்றும் டிரைலரை வெளியிட வேண்டியுள்ளது” எனக் கூறியுள்ளார்.