விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் இளைஞர்களையும் இளைஞிகளையும் வெகுவாகக் கவர்ந்து வருகிறது. அந்த வகையில் சூப்பர் ஹிட் அடித்த சீரியல் ஈரமான ரோஜாவே 2.
இந்த சீரியலில் ஜீவா என்ற கேரக்டரில் நடிகர் திரவியம் நடிக்க, காவியா என்ற கேரக்டரில் கேப்ரில்லா நடித்து வந்தார். இவர்களோடு பார்த்திபன் கேரக்டரில் சித்தார்த்தும், பிரியா கேரக்டரில் சுவாதியும் நடித்து வருகின்றனர்.

இந்த சீரியலை இயக்குனர் தாய் செல்வம் இயக்கி வந்தார். சமீபத்தில் அவர் உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்தார். அதையடுத்து சீரியல் இப்போது முடிவுக்கு வந்துள்ளது. அண்ணன் காதலித்த பெண்ணை தம்பி திருமணம் செய்துகொள்ள, தம்பிக்குப் பார்த்த பெண்ணை அண்ணன் ஒரு இக்கட்டான சூழலால் திருமணம் செய்துகொள்வது போல இந்த சீரியல் சென்றுகொண்டிருந்தது. தற்போது இருவரின் பிரச்சனைகளும் முடிவுக்கு வரும் கதை எடுத்து செல்லப்பட்டுள்ளது.
இந்த சீரியலில் முக்கியக் கதாபாத்திரத்தில் ரசிகர்களைக் கவர்ந்தவர் ஸ்வாதி. அவருக்கு சீரியலுக்கு வெளியேயும் எக்கச்சக்கமாக ரசிகர்கள் கிடைத்தனர். இதையடுத்து அவரின் அந்த பிரபலம் இப்போது அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. அதுவும் சாதாரண ஹீரோவுடன் கூட இல்லை.

முன்னணி நடிகரான கார்த்தி அடுத்து பிரேம் குமார் இயக்கத்தில் மெய்யழகன் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அரவிந்த் சுவாமி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில்தான் கார்த்திக்கு ஜோடியாக ஸ்வாதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.சீரியல் நடிகைகளுக்கு பொதுவாக சினிமாவில் வாய்ப்புக் கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும் ஹீரோயின் வாய்ப்புக் கிடைக்காது. ஆனால் ஸ்வாதிக்கு முதல்படமே ஜாக்பாட்டாக அமைந்துள்ளது.
கார்த்தியின் சமீபத்தைய படமான ஜப்பான் அட்டர் ப்ளாப் ஆனதை அடுத்து இப்போது அவர் நலன் குமாரசாமி இயக்கத்தில் ஒரு படமும், பிரேம் குமார் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரு படங்களையும் அவர் பெரியளவில் நம்பியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
