Friday, April 17, 2026
Home > Cinema > சீரியல் நடிகைன்னா இழுத்து போத்திகிட்டு வந்ததெல்லாம் அந்த காலம்.. பொன்னி சீரியல் நடிகையின் சினிமா ஹீரோயின்களை மிஞ்சும் மாடர்ன் புகைப்படங்கள் !! தர்ஷிகா!

சீரியல் நடிகைன்னா இழுத்து போத்திகிட்டு வந்ததெல்லாம் அந்த காலம்.. பொன்னி சீரியல் நடிகையின் சினிமா ஹீரோயின்களை மிஞ்சும் மாடர்ன் புகைப்படங்கள் !! தர்ஷிகா!

சின்னத்திரை நடிகைகளுக்கு ஒரு காலத்தில் சினிமா கதவுகள் திறப்பது என்பது குதிரைக் கொம்பாக இருக்கும். ஆனால் சமீபகாலமாக அந்த இரும்புக்கதவு மெல்ல மெல்ல திறக்க ஆரம்பித்துள்ளது. சமீபத்தில் பிரியா பவானி சங்கர் மற்றும் வாணி போஜன் ஆகியவர்கள் இந்த வெற்றிப் பாதையை உருவாக்கியுள்ளனர்.

இதனால் சீரியல் நடிகைகளுக்கும் தற்போது சினிமாவில் நடிக்கும் ஆசை எழுந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் பலரும் சினிமாவுக்கு செல்ல சீரியலை ஒரு எண்ட்ரிகார்டாகவும் பயன்படுத்துகின்றனர். அதனால் சீரியல்ந் நடிகை என்றாலே ஹோம்லியாக இருக்கவேண்டும் என்ற எழுதப்படாத விதியை மாற்றி ஹீரோயின்களுக்கு நிகராக கவர்ச்சியாகவும் மாடர்னாகவும் இருக்க தொடங்கியுள்ளனர்.

அப்படி ஒரு நடிகையாக இப்போது கவனம் ஈர்த்து வருகிறார் பொன்னி சீரியல் புகழ் தர்ஷிகா. இவரின் சின்னத்திரை அறிமுகம் ‘தென்றல் வந்து என்னை தொடும்’ என்ற சீரியல் உலகுக்கு அறிமுகம் ஆனார். இந்த சீரியல் 2021 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டுவரை ஒளிபரப்பானது. இந்த சீரியலில் ராதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதையடுத்து தற்போது அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பொன்னி என்ற சீரியலில் நடித்து வருகிறார். இதில் ப்ரீத்தி என்ற கதையின் மையப் பாத்திரங்களில் ஒன்றில் நடித்து வருகிறார். இது தவிரா மாடலிங் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார். யாக்கை என்ற நவீன உடையகம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

இதையடுத்து அவர் நவீன மாடர்ன் உடையணிந்து வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிவருகின்றன. அந்த புகைப்படங்களுக்கு எனவே அவரது சமூகவலைதளப் பக்கத்தில் லட்சக்கணக்கில் ரசிகர்கள் படையெடுக்கின்றனர்.