கொல்கத்தாவை சேர்ந்தவரான ரீமா சென் இந்தி படங்களில் நடித்துக் கொண்டிருந்த போது 2001 ஆம் ஆண்டு வெளியான மின்னலே திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். அந்த படம் வெற்றி பெற்றதை அடுத்து அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்தன.

அதைப் பயன்படுத்தி வழக்கமான கதாநாயகியாக கிளாமர் ரோல்களில் பகவதி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார். அதில் சொல்லிக் கொள்ளும் படியாக ஆயிரத்தில் ஒருவன், இந்தியில் கேங்ஸ் ஆஃப் வாசேபூர் உள்ளிட்ட படங்கள் அமைந்தன.
ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்புகள் குறைய பெங்காலியில் கவர்ச் சி தூக்கலான வேடங்களில் நடிக்க தொடங்கினார். பின்னர் 2012 ஆம் ஆண்டு ஷிவ் சரண் சிங் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து செட்டில் ஆன அவர் சினிமாவில் இருந்து விலகினார்.
ஒரு கட்டத்தில் ரசிகர்களும் அவரை மறந்தனர். இந்நிலையில் இப்போது அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவர் மற்றும் தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட அது வைரலாகி வருகிறது.
ரீமா சென்னின் மகன் நன்கு வளர்ந்து இப்போது தன்னுடைய பதின் பருவத்தில் இருக்கிறார். அதைப் பார்க்கும் ரசிகர்கள் இவருக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா என ஆச்சர்யமாகக் கேட்டு வருகின்றனர்.
