சன் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் துருதுருவென ஒரு தொகுப்பாளினியாக வலம் வந்தவர் நக்ஷத்திரா. சென்னையைப் பூர்விகமாகக் கொண்ட இவர் வீடியோ ஜாக்கியாக தன்னுடைய ஊடக வாழ்க்கையைத் தொடங்கினார். ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்த அவருக்கு சன் சிங்கர் நிகழ்ச்சியின் வாய்ப்புக் கிடைத்தது. அது அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

அதன் பின்னர் வானவில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதன் மூலம் அவர் முதலில் தந்தி டிவியில் பணியாற்றினார். நக்ஷத்ரா நடித்த என் இனிய பொன் நிலாவே மற்றும் சற்றென்று மாறுது வானிலை ஆகிய குறும்படங்களில் நடித்தார். இந்த குறும்படங்கள் இளைஞர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்தது. லட்சக் கணக்கான பார்வையாளர்களால் இந்த குறும்படம் யுடியூப் தளத்தில் பார்க்கப்பட்டன.
‘இதையடுத்து அவருக்கு சினிமா வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. சேட்டை மற்றும் வாயை மூடி பேசவும் போன்ற படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தார். ஆனாலும் அவரால் சினிமாவில் ஒரு கதாநாயகியாகவோ, முன்னணி நடிகையாகவோ வர முடியவில்லை. ஆனால் பாலாஜி மோகன் இயக்கிய ‘As I am suffering from fever’ என்ற வெப் சீரிஸ் அவருக்கு பாராட்டுகளைப் பெற்றுத் தந்தது.

இதையடுத்து நக்ஷத்ரா ராகவ் என்பவரை 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் தனக்கு ஷூட்டிங் ஸ்பாட் ஒன்றில் நடந்த மிக மோசமான சம்பவம் பற்றி அவர் பேசியுள்ளார். அதில் “ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டில் நான் உடை மாற்றுவதற்காக வேனுக்கு சென்றேன். அந்த வேனில் ஜன்னல் கண்ணாடியால் ஆனதாக இருந்தது. அதனால் என்னால் ஜன்னலை மறைக்க முடியவில்லை.

அப்போது அந்த வேனுக்கு வெளியே ஐந்து பேர் நின்று கொண்டிருந்தார்கள். நான் உடை மாற்ற போகிறேன் என்று தெரிந்தும் அவர்கள் அங்கிருந்து நகரவில்லை. அதனால் வேறு வழியில்லாமல் நான் என்னை முடிந்தவரை மறைத்துக்கொண்டு உடையை மாற்றினேன். ஆனாலும் அது ஒரு மோசமான அனுபவமாக அமைந்தது” எனக் கூறியுள்ளார்.
இதனை அடுத்து வேறு வழியில்லாமல் என்னால் எந்த அளவு மறைந்து கொண்டு உடையை மாற்ற முடியுமோ அந்த அளவிற்கு நான் உடையை மாற்ற முயற்சி செய்தேன். எனினும் அந்த சூழ்நிலையில் என்னை மறைக்க என்னால் அந்த அளவு முடியவில்லை என வருத்தத்தோடு தெரிவித்து இருக்கிறார்.
