விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார் நடிகை லாஸ்லியா மரியநேசன்.இவர் 1996 ஆம் ஆண்டு ஸ்ரீ லங்காவில் பிறந்தார்.

லாஸ்லியா இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அனைவருக்கும் பரிட்சயமான நபராக மாறினார் . இவர் பங்கேற்ற பிக் பாஸ் சீசன் 3 மிகவும் பிரபலமாக இவரும் ஒரு காரணமாக அமைந்தார்.

இவர்தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு பிறகு இலங்கையில் உள்ள ஒரு தனியார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்தார்.பின்னர் இவருக்கு நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 3 இல் கலந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது.

பிக் பாஸ் தொடரில் இவருக்கு நல்ல அறிமுகம் கிடைத்த நிலையில் அதன் பின்னர் சில விளம்பர படங்களில் நடித்தார் . அதன் பின்னர் பிரென்ஷிப் என்ற படத்தில் நடித்த இவர் அந்த திரைப்படம் தோல்வி அடைந்ததால் பெரிய அளவில் வாய்ப்புகள் அவருக்குக் கிடைக்கவில்லை.

அதையடுத்து வாய்ப்புகளைக் கவரும் விதமாக அவர் இப்போது மாடர்ன் உடையில் புகைப்படங்களை வெளியிட்டு கவனத்தை ஈர்த்து வருகிறார். அப்படி இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிவருகின்றன.






