Thursday, April 18, 2024
Home > Cinema > யசோதா படத்தை ஓடிடியில் வெளியிட தடை… ஏன் தெரியுமா?

யசோதா படத்தை ஓடிடியில் வெளியிட தடை… ஏன் தெரியுமா?

சமந்தா நடித்துள்ள யசோதா திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதில் சமந்தா ஒரு வாடகைத்தாயாக குழந்தை பெற்றுக் கொடுக்கும் தாயாக நடித்துள்ளார். அதில் எழும் பிரச்சனைகளைப் பற்றிய கதையாக வெளியாகியுள்ளது சமந்தா.

`

கடந்த 11 ஆம் தேதி வெளியான யசோதா திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் கலக்கி வருகிறது. முதல் நாளில் மட்டும் 6 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த யசோதா, 3 நாட்களில் 20 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாம். இந்த படம் சுமார் 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

```
```

இந்நிலையில் இந்த படத்தில் காட்டப்பட்டுள்ள மருத்துவமனையின் பெயரில் உண்மையாகவே ஒரு மருத்துவமனை இருப்பதாகவும், அதனால் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்ற வழக்கு தொடரப்பட்டது. அதையடுத்து படம் ஏற்கனவே திரையரங்குகளில் வெளியாகிவிட்ட நிலையில் வரும் 29 ஆம் தேதி ஓடிடியில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.