நடிகை கீர்த்தி சுரேஷ் பற்றி கடந்த சில தினங்களாக சமூகவலைதளங்களில் வதந்தி ஒன்று பரவி வந்தது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஏ.எல் விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நடிகை கீர்த்தி சுரேஷ்.இந்த படத்தில் இவரின் நடிப்பின் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.இவர் 2013 ஆம் ஆண்டு மலையாள திரைப்படமான கீதாஞ்சலி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இவர் 1992 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.கீர்த்தி சுரேஷ் தயாரிப்பாளர் ஜி.சுரேஷ்குமார் மற்றும் நடிகை மேனகா குமாரின் மகள். இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்தார்.இவர்குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் நடித்துள்ளார்.பின்னர் இவர் பேஷன் டிசைனிங் படிப்பை முடித்தார்.

இவர் தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் திரைப்படத்தில் அறிமுகமாகி பின்னர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரஜினி முருகன் படத்தில் நடித்து இளைஞர்களின் மனதில் இடத்தை பிடித்தார்.இதையடுத்து தளபதி விஜயுடன் பைரவா, சர்கார், ரெமோ சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம்,தொடரி போன்ற படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் சீனியர் நடிகர் ஒருவரை காதலிப்பதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் வதந்திகள் பரவின. சம்மந்தப்பட்ட அந்த நடிகர் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாகவும் முன்பு வதந்திகள் பரவின என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய பள்ளிகால நண்பர் ஒருவர் 13 வருடங்களாக காதலித்து வருவதாகவும் இன்னும் சில ஆண்டுகளில் இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
