தனது ஹா ட்டான புகைப்படங்கள் மூலமாக இணையத்தில் கலக்கி வருவபர் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்.

நடிகை ஜான்வி கபூர் பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருகிறார். இவர் தயாரிப்பாளர் போனி கபூருக்கும்,மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கும் மூத்த மகளாக பிறந்தார். இவரையும் தன்னை போலவே பாலிவுட்டில் ஹீரோயினாக்க வேண்டும் என ஆசைப்பட்டார் ஸ்ரீதேவி.

ஆனால் அவரின் மறைவுக்குப் பின்னர் 2018 ஆம் ஆண்டு தடக் என்ற ரீமேக் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார்.இந்த திரைப்படம் மராத்திய சினிமாவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த சாய்ராட் படத்தின் ரீமேக்.இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஜீ சினி விருதினை வென்றார் ஜான்வி கபூர்.

தற்போது பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருகிறார். இவர் நெட் ஃபிளிக்ஸில் என்ற ஓடிடி தளம் தயாரித்த கோஸ்ட் ஸ்டோரிஸ் படத்தில் நடித்திருந்தார்.இந்த படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தமிழ் படங்களில் நடிப்பது குறித்து பேசியுள்ள ஜான்வி கபூர் “நடிகர் விஜய்சேதுபதியின் மிகப்பெரிய ரசிகை நான். அவருடன் பேசும்போது உங்களின் ஏதாவது ஒரு படத்தில் என்னை நடிக்க வைக்க விரும்பினால், அதற்கான ஆடிஷனுக்கு வரக்கூட தயார் எனக் கூறியுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார். அதனால் விரையில் ஜான்வி கபூரை தமிழ் படங்களில் பார்க்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.




