Friday, March 29, 2024
Home > Cinema > துணிவு படத்தின் முதல் சிங்கிள் ‘சில்ல சில்லா’… ரிலீஸ் எப்போது? – வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

துணிவு படத்தின் முதல் சிங்கிள் ‘சில்ல சில்லா’… ரிலீஸ் எப்போது? – வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மூன்றாவது முறையாக அஜித் ஹெச் வினோத் கூட்டணி துணிவு படத்தில் இணைந்துள்ளனர். நடிகர் அஜித் தனது 61 ஆவது படமான துணிவு படத்தில் இப்போது கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தை ஹெச் வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். பல கட்டங்களாக நடந்து வரும் படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன் மற்றும் பிக்பாஸ் ஆமீர் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

`

படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ள நிலையில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. துணிவு படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி வெளியிடுகிறது.இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

```
```

இந்த படத்தின் அப்டேட்களுக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் இதுவரை போஸ்டரை தவிர வேறு எந்த அப்டேட்டும் வெளியிடாமல் படக்குழு ரகசியமாக வைத்திருந்தது. இந்நிலையில் இப்போது டிசம்பர் 9 ஆம் தேதி படத்தில் இடம்பெற்றுள்ள சில்லா சில்லா என்ற பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பாடலுக்கு ஜிப்ரான் இசையமைக்க, அனிருத் பாட, பாடல் ஆசிரியர் வைசாக் எழுதியுள்ளார்.