Wednesday, April 15, 2026
Home > Cinema > தோனியோடு கிசுகிசுக்கப்பட்ட இந்த தமிழ் பட நடிகையை ஞாபகம் இருக்கா?… வேற லெவலில் வெளியிட்ட புகைப்படங்கள்!

தோனியோடு கிசுகிசுக்கப்பட்ட இந்த தமிழ் பட நடிகையை ஞாபகம் இருக்கா?… வேற லெவலில் வெளியிட்ட புகைப்படங்கள்!

தமிழ் சினிமாவில் விக்ராந்த்  நடிப்பில் வெளியான கற்க கசடற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி.இவர் 1989 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்கம் என்ற பகுதியில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை பெங்களூரில் முடித்தார்.

பின்னர் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். பின்னர் புரு காபி, சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் ஃபேர் அண்ட் போன்ற பல விளம்பரங்களில் மாடலாக நடித்து வந்தார்.

தமிழ் சினிமாவில் கற்க கசடற படத்தின் மூலம் அறிமுகமானார் ராய் லட்சுமி.இந்த திரைப்படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும்  எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.பின்னர் 2005 ஆம் ஆண்டு காஞ்சனா மாலா கேபிள் டிவி படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார்.இவர் வால்மீகி படத்தின் மூலம் கன்னடத்தில் அறிமுகமானார்.இவர் விஜயகாந்த்துடன் நடித்த தர்மபுரி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

பின்னர் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்த தாம் தூம் திரைப்படம் இவருக்கு வெற்றியை கொடுத்தது. இவர் ராக் என் ரோல் படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார்.பின்னர் இவர் தமிழில் அரண்மனை, மங்காத்தா, காஞ்சனா போன்ற பல படங்களில் நடித்தார். இதையெல்லாம் விட அவரை இந்திய அளவில் பிரபலம் ஆக்கியது அவருக்கும் தோனிக்கும் இடையிலான நட்புதான். இருவரும் காதலிப்பதாக அப்போது கிசுகிசுக்கள் எழுந்தன.

இந்த திரைப்படங்கள் இவருக்கு வெற்றி படங்களாக அமைந்தது.இந்த படங்களின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.பின்னர் நீயா, ஜுலி போன்ற படங்களில் நடித்திருந்தார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் சின்ரலா படம் வெளியானது.தற்போது கேங்ஸ்டர் 21, ஜான்சி ஐபிஎஸ், மான்ஸ்டர், ஆனந்த பைரவி போன்ற பல படங்களில் பல மொழிகளில் நடித்து வருகிறார் இவர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.