பாலிவுட்டில் கேங்ஸ் ஆஃப் வாசேபூர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் ஹூமா குரேஷி. அவருக்கு மிகப்பெரிய அளவில் புகழைப் பெற்றுத் தந்தது கேங்ஸ் ஆஃப் வாசேபூர் திரைப்படம்தான்.

முன்னணி நடிகையான ஹூமா குரேஷி இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்கிய கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர் படத்தின் மூலம் பிரபலம் ஆனார். அதைத் தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்த அவர் தனது தனித்துவமான நடிப்புக்காக பாராட்டப்படுபவர்.

தமிழ் ரசிகர்களுக்கு அவரை அறிமுகப்படுத்தியது பா ரஞ்சித்தான். 2018 ஆம் ஆண்டு பா ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த காலா படத்தின் மூலமாக் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அந்த படத்தில் ரஜினிகாந்துடனான அவரது நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது.

அதன் பின்னர் வலிமை படத்தில் ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடித்து மேலும் ரசிகர்களைக் கவர்ந்தார். தொடர்ந்து நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்து கலக்கி வடும் ஹூமா இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் புகைப்படங்களுக்காகவும் ரசிக்கப்பட்டு வருகிறார்.

தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வரும் அவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளன. அந்த வகையில் இப்போது தன்னுடைய கட்டுடல் அழகை வெளிக்காட்டும் விதமாக கருப்பு நிற உடை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் கவனத்தை ஈர்த்துள்ளன.


