Thursday, June 4, 2026
Home > Cinema > ஏன் டையலசிஸ் செய்யவில்லை !! எந்த கெட்ட பழக்கமும் இல்லை ஆனாலும்… போண்டா மணியின் மரணம் குறித்து பேசிய பயில்வான்!

ஏன் டையலசிஸ் செய்யவில்லை !! எந்த கெட்ட பழக்கமும் இல்லை ஆனாலும்… போண்டா மணியின் மரணம் குறித்து பேசிய பயில்வான்!

தமிழ் சினிமாவில் 100க்கு மேற்பட்ட படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துக் கலக்கியவர் போண்டாமணி. குறிப்பாக வடிவேலுவின் நகைச்சுவை குழுவில் ஒருவராக அங்கம் வகித்து பல படங்களில் வடிவேலுவோடு இணைந்து நடித்துள்ளார். நடிகர் போண்டா மணி சிறுநீரக அறுவை சிகிச்சை காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் அவருக்கு சிறுநீரகத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழுந்துள்ளதாகவ்ய்ம், அதற்காக சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து இப்போது உடல்நலம் தேறியுள்ளார். அவருக்கு சில நடிகர்கள் பொருளாதார ரீதியாக உதவினர்.

இந்நிலையில் சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு பிறகு குணமாகி வீட்டுக்கு திரும்பிய போண்டாமணி, நேற்று முன் தினம் திடீரென உயிரிழந்தார். இது சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. அவரின் மரணம் குறித்து சினிமா பத்திரிக்கையாளரும், போண்டா மணியின் நெருங்கிய நண்பருமான பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார்.

அதில் “போண்டாமணிக்கு எந்த கெட்ட பழக்குமும் இல்லை. ஆனால் அவருக்கு கடந்த ஆண்டு இரண்டு கிட்னியும் செயலிழந்து விட்டது. கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த அவருக்கு கிட்னி இரண்டு முறை கிடைத்த போதும் அது மேட்ச் ஆகவில்லை.

இதனால் அவர் மாதத்தில் இரண்டு அல்லது மூன்று முறை டயாலிசிஸ் செய்து வந்தார். ஆனால் இந்த முறை டயாலிசிஸ் செய்ய செல்லவேண்டுமென்று அவர் மகன் சொன்னபோது கையில் காசு இல்லாததால் நாளைக்கு போகலாம் எனக் கூறியுள்ளார். ஆனால் அன்றிரவே வீட்டில் மயக்கம் அடைந்து விழுந்து இறந்துள்ளார். அவரின்  விதி முடிந்துவிட்டது.” எனக் கூறியுள்ளார்.