Friday, April 17, 2026
Home > Cinema > படுக்கைக்கு அழைத்தால் நான் ஓகே சொல்லிடுவேன்… ஆனா ஒரு கண்டீஷன் – நடிகை பாப்ரி கோஷின் பதில்!

படுக்கைக்கு அழைத்தால் நான் ஓகே சொல்லிடுவேன்… ஆனா ஒரு கண்டீஷன் – நடிகை பாப்ரி கோஷின் பதில்!

தமிழில் டூரிங் டாக்கீஸ் படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை பாப்ரி கோஷ். அதன் பின்னர் சர்க்கார் உள்ளிட்ட சில படங்களில் நடித்தாலும் அவருக்கு சினிமா வாய்ப்புகள் பெரிதாக அமையவில்லை.

அதனால் சின்னத்திரை பக்கம் நகர்ந்த அவர் இப்போது பிசியான சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் சினிமாவில் வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது பற்றி பேசியுள்ளார்.

அந்த பேட்டியில் அவரிடம் யாராவது உங்களை சினிமா வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தால் அதை எப்படி எதிர்கொள்வீர்கள் எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த பாப்ரி கோஷ் “நான் அதற்கு ஒத்துக் கொள்வேன்” எனக் கூறி அதிர்ச்சியைக் கிளப்பினார்.

மேலும் பேசிய அவர் “அதற்கு ஒரு கண்டீஷன் இருக்கிறது. அவர் கேட்கும் இடத்திலேயே ஓகே சொல்லமாட்டேன்.  அவருடைய வீட்டுக்கு சென்று அவரின் அம்மா, மனைவி மற்றும் குழந்தைகள் முன்பு சென்று, வாய்ப்பு தருகிறேன் எனக் கூறி படுக்கைக்கு அழைத்தீர்களே அதற்கு சம்மதம் எனக் கூறி முத்தம் கொடுப்பேன்” எனக் கூறியுள்ளார்.

இப்படிதான் நான் அதுமாதிரி அழைப்பவர்களுக்கு பதிலளிப்பேன் எனக் கூறி தடாலடியாக கூறியுள்ளார். அவரின் இந்த வித்தியாசமான பதில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.