தென்னிந்திய திரையுலகில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் தான் அனிகா சுரேந்தர். இவர் அஜித்தின் மகளாக என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் ஆகிய 2 படங்களில் நடித்து ஹிட் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார். இதையடுத்து தெலுங்கில் தி கோஸ்ட் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

2004 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்த இவருக்கு இப்போது 18 வயது ஆகும் நிலையில் தொடர்ந்து இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்து வருகிறது. தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா. தொடர்ந்து பல தமிழ் தெலுங்கு , மலையாள படங்களில் நடித்து வருகிறார் .

இந்த படத்தை தொடர்ந்து அவர் அடுத்ததாக புட்ட போம்மா என்ற படத்தில் தெலுங்கு மொழியில் நடித்து வருகிறார். இப்படி தமிழ், தெலுங்கு, மலையாள உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் அனிகா என்ன தான் பிஸியாக இருந்தாலும், அவ்வப்போது போட்டோஷூட் களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அங்கும் செலிபிரட்டியாகி உள்ளார்.

சமீபத்தில் ஓ மை டார்லிங் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் சமீபத்தில் வெளியான நிலையில் படத்தில் அனிகா லிப்லாக் காட்சிகளில் எல்லாம் அசால்ட்டாக நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் அனிகா.

இந்நிலையில் தற்போது அவர் கதாநாயகியாக நடித்துள்ள ஓ மை டார்லிங் என்ற திரைப்படம் ரிலீஸாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கதாநாயகியாக ப்ரமோஷன் ஆகிவிட்ட நிலையில் அவர் வெளியிடும் போட்டோஷூட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. அப்படி வெள்ளை ட்ரஸ்ஸில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

