விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் இன்று ரிலீஸாகவுள்ளது. தமிழகத்தில் காலை 9 மணிக்குக் காட்சிகள் தொடங்கிய நிலையில் அண்டை மாநிலங்களில் அதிகாலைக் காட்சிகள் ரிலீஸாகி ஒரு ஷோ முடிந்துள்ளது. தமிழ்நாட்டு ரசிகர்கள் அண்டை மாநிலங்களுக்கு படையெடுத்து படத்தைப் பார்த்து சமூகவலைதளங்களில் தங்கள் விமர்சனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
படம் பார்த்த ரசிகர்கள் விஜய்யின் நடிப்பு மற்றும் லோகேஷின் இயக்கத்தை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். படம் முழுவதும் விஜய் ஆக்ஷன் மற்றும் எமோஷனலாக தன் தோளில் சுமந்துள்ளதாக சிலாகிக்கின்றனர்.
மேலும் இத்தனை நாள் வரை படம் எல்சியு-வில் உள்ளதா இல்லை தனிப்படமா என்ற கேள்விக்கும் விடை கிடைத்துள்ளது. படத்தின் இறுதியில் கமல்ஹாசனின் குரல் இடம்பெற்று, எல் சி யு வில் லியோ படத்தை இடம்பெற செய்துள்ளது என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் லோகேஷ் சொன்னது போல படத்தின் முதல் 10 நிமிடக் காட்சி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளதாகவும், ஹைன்னாவோடு விஜய் சண்டை போடும் அந்த காட்சி மிகச்சிறப்பாக உருவாக்கப்பட்டு கூஸ்பம்ப் கொடுத்துள்ளதாகவும் ரசிகர்கள் கூறியுள்ளனர்.
படத்தைப் பார்த்துள்ள ரசிகர்கள் பெரும்பாலும் 3 ஸ்டார்களுக்கு மேல் தங்கள் விமர்சனமாக கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
