ஷிவானி நாராயணன் இன்ஸ்டாகிராம் மூலம் பலரது கவனத்தையும் பெற்றார். தினமும் வித விதமனா புகைப்படங்களை இறக்கி பல இளசுகளின் உள்ளத்தை கொள்ளை அடித்தார் ஷிவானி நாராயணன்.

2001 ஆம் ஆண்டு பிறந்த ஷிவானி நாராயணன் தனது 15 ஆவது வயதிலேயே நடிக்க ஆரம்பித்து விட்டார். 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு தொடர் மூலம் முதல் முதலில் சீரியலில் நடிக்க துவங்கினார் ஷிவானி.

அதன் பின்னர் அதே தொலைகாட்சியில் சரவணன் மீனாட்சி 3 தொடரில் நடித்தார் . அதன் பின்னர் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

பின்னர் கடைக்குட்டி சிங்கம் , ரெட்டை ரோஜா உள்ளிட்ட தொடர்களில் நடித்தார் ஷிவானி. பின்னர் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார் அதன் மூலம் பலருக்கும் அறிந்த முகமாக மாறினார் .


இன்ஸ்டாகிராம் பிரபல , பிக் பாசில் கிடைத்த அறிமுகம் மூலம் சில பட வாய்ப்புகள் கிடைத்தது. விக்ரம் படத்தில் நடித்த ஷிவானி. வீட்டுல விசேசம் , DSP , நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.


என்னதான் படங்களில் நடித்திருந்தாலும் இன்னும் தனக்கென ஒரு இடத்தை பிடிக்கவில்லை என்றே சொல்லலாம். இருந்தாலும் சினிமாவில் தனக்கான வாய்ப்புகளுக்கு போராடி வருகிறார் ஷிவானி.


இன்ஸ்டாகிராமில் ஷிவானி வெளியிடும் புகைப்படங்கள் வைரல் ஆவது வழக்கம் அப்படி வைரல் ஆன சில புகைப்படங்கள் உங்களுக்காக இந்த பதிவில்.

