Friday, March 29, 2024
Home > Cinema > நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் டீமுக்கு ஒன்றரைக் கோடி செலவை இழுத்துவிட்ட வடிவேலு! எப்படி தெரியுமா ?

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் டீமுக்கு ஒன்றரைக் கோடி செலவை இழுத்துவிட்ட வடிவேலு! எப்படி தெரியுமா ?

நகைச்சுவையில் கொடி கட்டி பறந்த வடிவேலு 2011 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுக்கப்பட்டார். அதனால் கிட்டத்தட்ட 10 வருடங்களாக அவர் தொடர்ச்சியாக படங்களில் நடிக்கவில்லை.

இதையடுத்து 2018 ஆம் ஆண்டு இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால் இயக்குனர் சிம்புதேவன் தரப்புக்கும் வடிவேலு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் படம் கிடப்பில் போடப்பட்டது.

`

பலமுறை சமாதானப் பேச்சுவார்த்தை நடத்திய பிறகும் வடிவேலு அந்த படத்தில் மீண்டும் நடிக்க மறுத்தார். இதையடுத்து இப்போது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், சந்திரமுகி 2 மற்றும் மாமன்னன் ஆகிய படங்களின் மூலம் ரி எண்ட்ரி கொடுத்துள்ளார்.

```
```

இதில் முதலில் நாய்சேகர் திரைப்படம்தான் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்துக்காக தேவையில்லாமல் ஒரு பாடலை உருவாக்க சொல்லி வம்பிழுத்து அந்த பாடலை ஷூட் செய்ய சொன்னாராம் வடிவேலு. ஒன்றரை கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து எடுக்கப்பட்ட அந்த பாடலை இப்போது படத்தில் எங்குமே பொறுத்த முடியாமல், படம் முடிந்ததும் டைட்டில் கார்டு வரும் போது வைத்துள்ளார்களாம். அதனால் திரையரங்கில் அந்த பாடலை ரசிகர்கள் பார்க்காமல் கிளம்பிவிடுவார்கள். அதனால் அந்த பாடல் எடுத்ததே வீண்தான் என்று படக்குழு புலம்பி வருகிறதாம்.