Saturday, May 2, 2026
Home > Cinema > பொன்னியின் செல்வனில் குட்டி குந்தவையாக நடித்தது இந்த சீரியல் நடிகையின் மகளா?

பொன்னியின் செல்வனில் குட்டி குந்தவையாக நடித்தது இந்த சீரியல் நடிகையின் மகளா?

கடந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வெற்றியைப் பெற்றது.  படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, பார்த்திபன், பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா லெஷ்மி, பேபி சாரா என ஏராளமானோர் நடித்திருந்தனர்.

இந்த திரைப்படத்துக்கு கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து படம் பார்த்து சென்றனர்.  இதனால் முதல் 3 நாட்களில் உலகம் முழுவதும் சுமார் 200 கோடி ரூபாய் எட்டிய பொன்னியின் செல்வன், 6 நாட்களில் 300 கோடி ரூபாய் வசூலை எட்டியது. 12 நாட்களில் 400 கோடியும் , இதுவரை 450 கோடி ரூபாய்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

இதையடுத்து பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆனது, முதல் பாகம் அளவுக்கு இரண்டாம் பாகத்துக்கு எதிர்பார்ப்பு பெரிதாக இல்லை. ஆனாலும் படம் ரிலீஸாகி நல்லா கல்லா கட்டி வருகிறது.

இந்நிலையில் இரண்டாம் பாகத்தில் சிறுவயது குந்தவையாக நடித்த சிறுமி, ரசிகர்களைக் கவனிக்க வைத்துள்ளார். அவர் வேறு யாருமில்லை சீரியல் நடிகையான கன்யா பாரதியின் மகள் நிலாதான். நிலாவின் தந்தையும் சினிமா துறையை சேர்ந்தவர். நடிகரும் சின்னத்திரை இயக்குனருமாக அறியப்படும் கவிதா பாரதிதான்.

இதையடுத்து நிலாவின் ஸ்க்ரீன்ஷாட்கள் மற்றும் புகைப்படங்கள் அதிகளவில் பகிரப்படுகின்றன. நிலா பொன்னியின் செல்வனில் நடித்தாலும், அடுத்தடுத்து சினிமாவில் கவனம் செலுத்தப் போவதில்லை என்றும் இப்போதைக்கு படிப்புதான் என்றும் கவிதா பாரதி கூறியுள்ளார்.