நடிகர் விஷால் விரைவில் நடிகை அபிநயாவை திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் விஷால் கடந்த 15 ஆண்டுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். தமிழில் குறிப்பிடத்தகுந்த ஆக்ஷன் ஹீரோவாக இருக்கும் இவரின் படங்களுக்கு இந்தியிலும் நல்ல மார்க்கெட் உள்ளது.
விஷால் நடிப்பது மட்டும் இல்லாமல் தயாரிப்பு, நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என பிஸியாக இயங்கியவர். இவர் தலைமையில் சென்னையில் நடிகர் சங்கத்துக்கான கட்டிடம் தொடங்கப்பட்டு பாதி முடிந்த நிலையில் இப்போது கிடப்பில் உள்ளது.
இந்த கட்டிடம் கட்டி, அதில்தான் தன்னுடைய திருமணம் நடக்கும் என பேசி இருந்தார். ஆனால், இப்போது விஷாலுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாம். தமிழில் நாடோடிகள் படத்தில் சசிகுமாருக்கு தங்கையாக நடித்திருந்தவர் அபிநயா. தெலுங்கு மொழிப் படங்களிலும் இவர் நடித்துள்ளார். இவரைதான் விஷால் திருமணம் செய்ய உள்ளாராம்.

ஏற்கனவே விஷால் நடிகை வரலட்சுமி மற்றும் ஒரு தெலுங்கு நடிகை ஆகியோரோடு காதலில் இருந்து, பின்னர் அந்த காதல்கள் முறிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
