தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி காலமானார். சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
26ம் தேதி இரவு 9 மணிக்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து இன்று காலை அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், வெண்டிலேட்டர் சிகிச்சையில் இருந்தார். இந்த நிலையில் தற்போது (28/12/23) காலை அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.
கேப்டன் விஜயகாந்த்தாக மக்கள் மனதில் என்றும் நிலைத்து இருக்கும் ஒரு பிரபலம். சினிமாவில் எப்போதும் தனக்கு நாட்டின் மேல் உள்ள அக்கறையை காட்டிய வண்ணம் இருப்பார்.
அவரின் இறுதி ஊர்வலம் மக்கள் கடலுக்கு நடுவே நடந்தது. அவரின் உடல் தேமுதிக கட்சி அலுவலகம் உள்ள கோயம்பேட்டில் புதைக்கப்பட்டது. இதையடுத்து அவரது மரணத்தில் அஞ்சலி செலுத்த முடியாமல் வெளிநாட்டில் இருந்த விஷால் சென்னை திரும்பியதும், கோயம்பேடு சென்று விஜயகாந்த் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். அங்கு அவரும் ஆர்யாவும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
பின்னர் விஜயகாந்த் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் கட்டப்பட்டு வரும் நடிகர் சங்க கட்டடத்துக்கு விஜயகாந்த் பெயரை வைப்போம் எனக் கூறி பாராட்டுகளைப் பெற்றார்.
தொடர்ந்து தன்னுடைய நடவடிக்கைகளால் மோசமான இமேஜை சம்பாதித்து வைத்திருந்த விஷால் இந்த ஒரே ஒரு நடவடிக்கையின் மூலம் இப்போது அதையெல்லாம் மறக்கவைத்து நல்ல பிள்ளை இமேஜை பெற்றுவிட்டார் என சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்க ஆரம்பித்துள்ளனர். விஜயகாந்தை வைத்து தன்னுடைய இமேஜை விஷால் காப்பாற்றிக்கொண்டார் என்று பலரும் கூறி வருகின்றனர்.
