Saturday, August 1, 2026
Home > Cinema > விஜயகாந்துக்காக திருமணமே செய்துகொள்ளாமல் கூட இருந்த இப்ராஹிம் ராவுத்தர்… அரசியலால் முடிவுக்கு வந்த நட்பு!

விஜயகாந்துக்காக திருமணமே செய்துகொள்ளாமல் கூட இருந்த இப்ராஹிம் ராவுத்தர்… அரசியலால் முடிவுக்கு வந்த நட்பு!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜயகாந்த் இப்போது உடல்நலக்குறைவு காரணமாக ஓய்வில் இருக்கிறார். ரசிகர்களால் கேப்டன் என அன்போடு அழைக்கப்படும் இவர் ஏற்கனவே உ டல் ந லக்கு றைவால் பா திக் கப்பட்டிருந்தார். அவர், கடந்த சில ஆண்டுகளாகவே மருத்துவமனையில் சி கி ச் சை பெற்று வருகிறார். இதனால் அ டிக்க டி சி கிச் சைக் காக வெளிநாடுகளுக்கு செல்வதும் சென்னையிலேயே மருத்துவமனைகளில் அட்மிட் ஆவதுமாக இருந்து வருகிறார்.

சமீபத்தில் அவருக்குக் கால்களில் விரல்கள் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அகற்றப்பட்டன.  இந்த தகவலைக் கேட்ட அவரது தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் அப்படியே ஒரு கணம் உ றைந் து போய் விட்டனர். பல மேடைகளில் ஒரு குழந்தையைப் போல என்ன நடக்கிறது என எதுவுமே விஜயகாந்துக்கு தெரியாமல் இருக்க தொண்டர்கள் அனைவரும் கண் க ல ங் கினார்கள். உடனே அவரது மனைவி பிரேமலதா கண் கண்ணாடியை போட்டு விட்டார். மேலும், விஜயகாந்த்தால் நேராக, நிமிர்ந்து கூட உட்கார முடியவில்லை.

அரசியலுக்கு வருவதற்கு முன்பாக தமிழ் சினிமாவில் தனது படங்களால், ரஜினி கமலுக்குப் பிறகு கோலோச்சி வந்தவர் விஜயகாந்த். 80 களிலும் 90களிலும் அவர் பல ஆக்‌ஷன் மற்றும் குடும்ப திரைப்படங்களில் நடித்துள்ளார். கேப்டன் பிரபாகரன் படத்துக்கு பிறகு திருமணம் செய்துகொண்ட அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களும் இப்போது சினிமா மற்றும அரசியலில் கவனம் ஈர்த்துள்ளன.

விஜயகாந்தின் சினிமா வளர்ச்சிக்கு அவர் கூடவே இருந்து அவருக்கான கதைகளைக் கேட்டு நல்ல படங்களை தயாரித்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர் இப்ராஹிம் ராவுத்தர். விஜயகாந்தும் இப்ராஹிம் ராவுத்தரும் மதுரையில் சிறுவயதில் இருந்தே நண்பர்கள். விஜயகாந்த் சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தபோது அவர் கூடவே ராவுத்தரும் சென்னைக்கு வந்துவிட்டார்.

விஜயகாந்த் ஆரம்ப காலங்களில் ஒரு நிலையான இடத்துக்காக போராடிக் கொண்டிருந்த போது அவருக்கு உற்ற துணையாக இருந்தவர் ராவுத்தர். இருவரும் இணைந்து இப்ராஹிம் விஜயகாந்த் பிக்சர்ஸ் என்ற பெயரில் படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி பல வெற்றிப் படங்களைக் கொடுத்தனர். விஜயகாந்தை ஒரு வெற்றிகரமான கதாநாயகனாக ஆக்கியதோடு இல்லாமல் அவருக்கு அரசியல் பாதையையும் காட்டியவர் ராவுத்தர்தான்.

விஜயகாந்துக்காக திருமணம் கூட செய்துகொள்ளாமல் வாழ்ந்தவர் ராவுத்தர். ஆனால் விஜயகாந்த் திருமணத்துக்குப் பிறகு மெல்ல மெல்ல இவர்கள் நட்பில் விரிசல் விழுந்ததாக சொல்லப்படுகிறது. விஜயகாந்த் அரசியலில் ஈடுபட்ட பிறகு ஒரு கட்டத்தில் இருவரும் பிர்ந்தனர். அதன்பிறகு விஜயகாந்த், ராவுத்தர் மரணப் படுக்கையில் இருக்கும்போதுதான் அவரை சென்று சந்தித்தார். ராவுத்தர் தன்னுடைய 64 ஆவது வயதில் உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தினார்.