Sunday, April 19, 2026
Home > Cinema > ரஜினி சொன்ன காக்கா கழுகு கதைக்கு போட்டியா லியோ வெற்றி விழாவில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி!

ரஜினி சொன்ன காக்கா கழுகு கதைக்கு போட்டியா லியோ வெற்றி விழாவில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி!

தளபதி விஜய்யின் சமீபத்தைய படமான லியோ கடந்த 19 ஆம் தேதி ரிலீஸாகி இதுவரை 550 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது. இதையடுத்து படத்தின் வெற்றிவிழாவை நேற்று படக்குழு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடத்தியது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய படத்தின் கதாநாயகன் விஜய் ஒரு குட்டி ஸ்டோரி சொல்லி ரசிகர்களைக் குஷிப்படுத்தினார். அதில் ‘ஒரு காட்டுல யானை, புலி, மான், காக்கா, கழுகு என்று நிறைய உயிரினங்கள் இருந்ததாம். அந்த காட்டுல வேட்டையாடுவதற்கு இரண்டு பேர் போறாங்க. ஒருத்தர் வில் அம்பு எடுத்துட்டு போறார்.

இன்னொருத்தர் ஈட்டி எடுத்துட்டு போறார். வில் அம்பு எடுத்துட்டு போறவர் முயலுக்கு குறி வைக்கிறார். ஈட்டி வைத்திருப்பவர் யானைக்கு குறி வைக்குறார். காட்டை விட்டு வரும் போது வில் அம்பு வச்சிருந்தவர் மட்டுமே கையில் முயலோடு வருகிறார். ஆனால் ஈட்டி வைத்திருந்தவர் சும்மா வருகிறார். இதில் யார் வெற்றி பெற்றவர்.  யானையை குறி வச்சவர்தான். எப்போதுமே பெரிய விஷயங்களுக்குதான் குறி வைக்கனும்.

ஒரு குட்டிப் பையன் அப்போவோட டிரஸ்ஸ போடணும்னு தான் ஆசைப்படுவான். அவனுக்கு தெரியும் அது பெரிய டிரஸ்ஸுன்னு. அவனைப் பொறுத்தவரை அப்பா மாதிரி ஆகனும் ஆசைப்படுவான். சின்னதா கனவு காணுவது கிரைம் என்று அப்துல் கலாம் சொல்லி இருக்காரு. அதனால் இலக்குகள பெரிதாக வைத்துக் கொள்ளுங்கள்” எனக் கூறி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.