தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் ஆண்டனி தற்போது ஐந்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவிக் சுக்ரன் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் விஜய் ஆண்டனி. தொடர்ந்து பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்த அவர் இடையில் நான் படம் மூலமாக நடிகராக அறிமுகமானார். அந்த படம் வெற்றி பெற்றதை அடுத்து நடிப்பில் முழு மூச்சாக இறங்கினார்.
தன் படங்களுக்கு மட்டும் இசையமைத்து வந்த அவர் இப்போது சுத்தமாக இசையமைப்பதை நிறுத்திவிட்டு நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். இப்போது அவர் கைவசம் கொலை, ரத்தம் என ஐந்துக்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் அடுத்தடுத்து வரிசையாக ரிலீஸ் ஆக உள்ளன.

இந்த நிலையில் தன் ட்விட்டர் பக்கத்தில் விஜய் ஆண்டனி ஒரு பதிவிட்டுள்ளார். அதில், ‘’உங்க குடும்பத்துல எதாவது பிரச்சனன்னா, முடிஞ்ச வரைக்கும் உங்களுக்குள்ள அடிச்சிக்கங்க, இல்ல விட்டு விலகிடுங்க, இல்ல கைல கால்ல விழுந்து சமாதானம் பண்ணி சேர்ந்து வாழுங்க. ஆனா மத்தவங்கள மட்டும் கூப்பிடாதீங்க… கும்மியடிச்சு கதைய முடிச்சு விட்ருவாங்க” என ட்வீட் செய்துள்ளார். எத்ற்காக யாரை குறிப்பிட்டு இந்த பதிவை அவர் பகிர்ந்துள்ளார் என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
