பிக்பாஸ் ஆறாவது சீசன் தொடங்கி தற்போது ஆரம்ப கட்டத்தில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
சமீபத்தைய கமலின் விக்ரம் படத்துக்கும் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இளைஞர்களிடம் நெருக்கமானது ஒரு முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் கமல் அப்படியே பிக்பாஸ் 6 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார்.
கடந்த ஞாயிறு அன்று மாலை இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் அறிமுகம் மற்றும் பிக்பாஸ் இலல்த்தின் முதல் நாள் ஒளிபரப்பானது. இதில் முதல் போட்டியாளராக உள்ளே சென்ற டிக்டாக் பிரபலம் ஜி பி முத்து தனியாக தான் மட்டும் இருப்பதால் பயந்து தனக்கு தானே பேசிகொண்டு அடுத்த போட்டியாளரை உடனடியாக அனுப்பக் கேட்டுக்கொண்டார்.
அப்போது அவரோடு பேசிய கமல் “கொஞ்ச நேரம் தனியாக இருக்கவே இப்படி பயப்படுகிறீர்களே… ஏவாள் வரும் வரை ஆதாம் எவ்வளவு பயந்திருப்பார்” எனக் கேட்க, அதைப் புரிந்து கொள்ளாத ஜி பி முத்து “ஆதாம்’ஆ” எனக் கேட்க அதிர்ச்சியான கமல் பின்னர் அதை ஒருவாறு சமாளித்தார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. இப்படி முதல் நாளே ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளார் ஜி பி முத்து. அப்போதே இந்த ஆண்டு பிக்பாஸின் அனைவரையும் கவரும் போட்டியாளாராக ஜி பி முத்து இருப்பார் என்று தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இப்போது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் கேமராவிலேயே தன்னை எப்போதும் வம்பிழுக்கும் பேப்பர் ஐடி என்ற நபருக்கு பதிலளிக்கும் விதமாக ஜாலியாக பேசியுள்ளார். இந்த காட்சி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளார்.
