Saturday, May 11, 2024
Home > Cinema > விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ப்ரதீப் நடிக்கும் “LIC”… ஹீரோயின் இவரா- வைரல் பூஜை புகைப்படங்கள்!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ப்ரதீப் நடிக்கும் “LIC”… ஹீரோயின் இவரா- வைரல் பூஜை புகைப்படங்கள்!

லவ் டுடே என்ற ஒரே படத்தில் நடித்து இயக்கியதன் மூலம் புகழின் உச்சத்தை தொட்டுள்ளார் லவ் டுடே புகழ் ப்ரதீப் ரங்கநாதன்.  5 கோடி ரூபாய் பட்ஜெட்டுக்குள் எடுக்கப்பட்ட இந்த படம் சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் திரையரங்குகள் மூலமாக மட்டுமே வசூல் செய்தது.

இந்த படத்துக்கு பிறகு அவருக்கு நடிப்பதற்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில் இப்போது வரை அவர் எந்த படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகவில்லை. இதற்கிடையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த படத்துக்கான வீடியோ அறிவிப்பு ஒன்றை விக்னேஷ் சிவனோடு இணைந்து வெளியிட்டு இருந்தார்.

`

இந்நிலையில் இப்போது அந்த படத்தை தயாரிப்பதில் இருந்து ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் விலகியுள்ளதாக சொலல்ப்படுகிறது. அதற்குக் காரணம் அந்த படத்தின் பட்ஜெட்தான் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்தில் நடிக்க ப்ரதீப் ரங்கநாதன் தன்னுடைய சம்பளமாக 20 கோடி ரூபாய் கேட்டுள்ளாராம். மேலும் இயக்குனரான விக்னேஷ் சிவனும் தன் பங்குக்கு 10 கோடி ரூபாய் சம்பளமாக கேட்டுள்ளாராம்.

```
```

இதனால் இந்த படத்தின் பட்ஜெட் சுமார் 60 கோடி ரூபாய் அளவுக்கு சென்றுள்ளதாம். ஆரம்பத்தில் இருந்தே படத்தின் பட்ஜெட்டை குறைக்க சொல்லி கமல் தரப்பில் சொல்லியும், இருவரும் குறைக்கவில்லை என்பதால் படத்தை விட்டு ராஜ்கமல் பிலிம்ஸ் விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

அதனால் இப்போது அந்த படத்தை இப்போது மாஸ்டர் மற்றும் லியோ படங்களின் தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்கிறார். இந்த படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடந்துள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக க்ரீத்தி ஷெட்டியும் முக்கிய வேடத்தில் எஸ் ஜே சூர்யாவும் நடிக்கின்றனர். படத்துக்கு LIC- Love Insurance Corporation என தலைப்பு வைத்துள்ளனர். படத்தின் பூஜை புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.