சூர்யா தற்போது சூர்யா 42 படமான கங்குவா படத்தில் நடித்து வருகிறார். நடிகர் சூர்யா இயக்குனர் சிறுத்தை சிவா ஆகியோர் இணைந்து படம் பண்ணுவதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் சிறுத்தை சிவா தொடர்ந்து அஜித் படங்களை இயக்கியதால் இந்த கூட்டணி தாமதம் ஆனது. இப்போது இருவரும் இணைந்து ‘கங்குவா ’ படத்தை தற்போது கிட்டத்தட்ட முடித்துள்ளனர்.
இந்த படம் 10 இந்திய மொழிகளில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திஷா பட்டாணி கதாநாயகியாக நடிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். சமீபத்தில் கோவாவில் இதன் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
இந்த படத்தை முடித்துவிட்டு அவர் வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் துல்கர் சல்மான் மற்றும் விஜய் வர்மா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
இதையடுத்து சூர்யா கர்ணா என்ற இந்தி படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குரிய படமான வெற்றிமாறன் – சூர்யா கூட்டணியில் சில ஆண்டுகளுக்கு முன்னரே அறிவிக்கப்பட்ட வாடிவாசல் படத்தின் கதி என்ன என்பதே தெரியவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் சூர்யா ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகிவிட்டால் பின்னர் வேறு எந்த படத்திலும் கமிட்டாக முடியாது என்பதால் வெற்றிமாறனிடம் வாடிவாசல் பற்றி கேட்டுள்ளாராம்.
அதற்கு வெற்றிமாறன் “வாடிவாசல் படத்தின் முதல் கட்ட ஷூட்டிங்கை வேண்டுமானால் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் சுமார் 10 நாட்கள் நடத்தலாம்.” என உறுதியளித்துள்ளாராம். அதற்குள் சூர்யா சுதா கொங்கரா படத்தை முடித்துவிடுவார் என சொல்லப்படுகிறது.
அதுவும் முதல் கட்ட ஷூட்டிங்கே சூர்யாவும் அமீரும் இணைந்து நடிக்கும் காட்சிகளை வெற்றிமாறன் படமாக்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே பருத்திவீரன் பிரச்சனையில் சூர்யா தரப்புக்கும் அமீர் தரப்புக்கும் வார்த்தை போர் ஓடிக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதை கேள்விப்பட்ட சூர்யா இது என்னடா புது வம்பா இருக்கு என பலத்த யோசனையில் இருக்கிறாராம். இதனால் வாடிவாசல் மீண்டும் அந்தரத்தில் தொங்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. ஒரு வேலை சூர்யா இதற்கு ஒப்புக் கொள்ளாவிட்டால் மீண்டும் வாடிவாசல் தள்ளிப் போகும் நிலையும் ஏற்படலாம்.
