Saturday, April 18, 2026
Home > Cinema > பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றும் கல்லூரி கால தோழி பூர்ணிமாவ திரும்பி கூட பார்க்காதது ஏன்… இந்துஜா அளித்த பதில்!

பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றும் கல்லூரி கால தோழி பூர்ணிமாவ திரும்பி கூட பார்க்காதது ஏன்… இந்துஜா அளித்த பதில்!

தொலைக்காட்சி வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளது தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி. தொடர்ந்து 7 சீசன்களாக நடந்து வரும் பிக்பாஸ் இந்த சீசனில் அவ்வளவாக சூடுபிடிக்கவில்லை. அதனால் செயற்கையாகவே பல பரபரப்புகளை உருவாக்கி வருகின்றனர். ஆரம்பத்தில் பவா செல்லத்துரையை அனைவரும் டார்கெட் செய்து வெளியேற்றியது, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி பிரதீப் ஆண்டனியை வெளியேறியது என சர்ச்சைகள் காரணமாக பிக்பாஸ் கவனம் பெற்று வருகிறது.

இந்த முறை போட்டியாளராக சென்றுள்ள பூர்ணிமா அதிகமாக சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். பாடகி சுசித்ரா தொடர்ந்து பூர்ணிமாவின் செயல்களை கடுமையாக விமர்சித்து வருகிறார். நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் கமல்ஹாசன், பூர்ணிமாவை சில கேள்விகள் கேட்டு, அவரின் குறைகளை சுட்டிகாட்டி பேசினார். அதில் இருந்து அம்மணி பயத்தில் உலாவி வருகிறார் பிக்பாஸ் வீட்டில் . இந்நிலையில் இந்த வாரம் ஹரிஷ் கல்யாண் மற்றும் இந்துஜா நடித்துள்ள பார்க்கிங் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் அதன் ப்ரமோஷனுக்காக ஹரிஷ் கல்யாண் மற்றும் இந்துஜா ஆகியோர் பிக்பாஸ் வீட்டுக்கு வந்தனர்.

இந்துஜாவும், பூர்ணிமாவும் கல்லூரி காலத்தில் ஒன்றாக படித்தவர்கள். அந்த நட்பின் காரணமாக இந்துஜா பூர்ணிமாவிடம் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் பூர்ணிமாவிடம் ஒருவார்த்தைக் கூட பேசவில்லை. இதனால் மனமுடைந்து சக பிக்பாஸ் போட்டியாளரான மாயாவிடம் அழுது புலம்பினார் பூர்ணிமா.

அப்போது “நான் ஏற்கனவே ரொம்ப நொந்து போய் இருக்கேன். வெளியில் இருந்து வருபவர்கள் எனக்கு ஆதரவாக பேசினால் நன்றாக இருக்கும். ஆனால் என்னோட ஒன்னா படிச்ச இந்துஜா என் முகத்தக் கூட பாக்கல” என மிகவும் சோர்ந்து போய் பேசினார்.

இந்நிலையில் இப்போது இந்துஜா தான் ஏன் பூர்ணிமாவிடம் பேசவில்லை என்பது பற்றி விளக்கம் அளித்துள்ளார். அதில் “நாங்கள் எங்கள் பார்க்கிங் படத்தின் ப்ரமோஷனுக்காக சென்றோம். உள்ளே செல்லும்போதே எங்களிடம் பல விதிகளை சொல்லிதான் அழைத்து சென்றார்கள். நானும் பூர்ணிமாவும் ஒன்றாக கல்லூரியில் படித்தோம். ஆனால் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறைதான் பேசிக் கொள்வோம். அவர் நல்லவர். நன்றாக விளையாடுகிறார்.” என மழுப்பலான ஒரு பதிலை கூறியுள்ளார்.