போனி கபூரின் மூத்தமகளான ஜான்வி கபூர் துணிவு படம் பற்றி ட்வீட் செய்துள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
பாலிவுட் தயாரிப்பாளரும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் தமிழில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தின் மூலமாக தயாரிப்பாளராக அறிமுகம் ஆனார். அதன் பின்னர் வலிமை படத்திலும் இருவரும் இணைந்து பணியாற்றினர்.
இப்போது மூன்றாவது முறையாக துணிவு படத்தில் இணைந்துள்ளனர். நடிகர் அஜித் தனது 61 ஆவது படமான துணிவு படத்தில் இப்போது கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தை ஹெச் வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். பல கட்டங்களாக நடந்து வரும் படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன் மற்றும் பிக்பாஸ் ஆமீர் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ள நிலையில் பொங்கலுக்கு இந்த படம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் படத்தின் டைட்டில் மற்றும் சில போஸ்டர்கள் தவிர படத்தின் அப்டேட் எதுவும் வெளியாகவில்லை. இது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.
இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரின் மகளும் நடிகையுமான ஜான்வி கபூர் “அடுத்த வாரம் கண்டிப்பாக துணிவு அப்டேட் வெளியாகும்” என ட்வீட் செய்துள்ளார்.
