Sunday, September 27, 2026
Home > Cinema > 3 நாள் தள்ளி ரிலீஸ் ஆகும் வாரிசு… கடைசி நேரத்தில் திடீர் முடிவு!

3 நாள் தள்ளி ரிலீஸ் ஆகும் வாரிசு… கடைசி நேரத்தில் திடீர் முடிவு!

விஜய் நடிக்கும் வாரிசு  படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க, தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு உள்ளிட்ட ஏராளமானோர் நடிக்க, தமன் இசையமைக்கிறார். முதல் முதலாக விஜய் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். தற்போது தமிழ் சினிமாவில் உருவாகி வரும் அதிக பட்ஜெட் கொண்ட படமாக வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த படம் வரும் ஜனவரி 11 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது வாரிசு படத்தின் தெலுங்கு வெர்ஷன் வாரசுடு ஜனவரி 14 ஆம் தேதிதான் வெளியாகும் என தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்துள்ளார். இதனால் ஆந்திராவிலும் தெலங்கானாவில் வாரிசு படத்தின் தமிழ் வடிவமே முதல் 3 நாட்களுக்கு ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.