Sunday, April 19, 2026
Home > Cinema > “வெயிட் பண்ண சொல்றா அவன..” –வடிவேலுவ ஒருமையில் பேசிய டிரம்ஸ் சிவமணி? – கலைஞர் 100 நிகழ்ச்சியில் நடந்த சம்பவம்!

“வெயிட் பண்ண சொல்றா அவன..” –வடிவேலுவ ஒருமையில் பேசிய டிரம்ஸ் சிவமணி? – கலைஞர் 100 நிகழ்ச்சியில் நடந்த சம்பவம்!

தமிழ் சினிமாவில் கதாசிரியராக கோலோச்சியவர் கலைஞர் கருணாநிதி. அவர் எழுதிய பராசக்தி, மனோகரா, மலைக்கள்ளன் ஆகிய திரைப்படங்கள் அவரின் வசனத்துக்காகவே ஹிட் அடித்தன என்று சொன்னால் அது மிகையாகாது.

சினிமாவில் இருந்தபடியே திமுகவில் முக்கியத் தலைவராக வளர்ந்து வந்த கலைஞர் 1969 ஆம் ஆண்டு தமிழக முதல்வரானார். அதன் பின்னரும் தொடர்ந்து பல படங்களுக்கு அவர் கதை வசனம் எழுதினார். தொடர்ந்து தான் முதல்வராக இருக்கும் போதெல்லாம் தமிழ் சினிமாவுக்கு பல நல திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிலையில் இந்த ஆண்டு கலைஞர் நூற்றாண்டாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழ் சினிமாவின் ஒட்டுமொத்தமாக ஒன்றிணைந்து கலைஞர் 100 என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சி நேற்று முன்தினம் சென்னை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் ஏராளமானவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு அதற்கேற்றார் போல ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. சுமார் 20000 பேர் வரை வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 5000 பேர் கூட வரவில்லை என சொல்லப்படுகிறது. இத்தனைக்கும் இந்த நிகழ்ச்சியில் ரஜினி, கமல் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் கலந்துகொண்டு பேசினர்.

இந்த நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் ஏராளமானவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு அதற்கேற்றார் போல ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. சுமார் 20000 பேர் வரை வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 5000 பேர் கூட வரவில்லை என சொல்லப்படுகிறது. இத்தனைக்கும் இந்த நிகழ்ச்சியில் ரஜினி, கமல் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் கலந்துகொண்டு பேசினர்.

அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த விருந்தினர்களை ஒழுங்காக அனுப்பி வைக்கவும் இல்லை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். நிகழ்ச்சி முடிந்ததும் அனைவரும் பேட்டரி கார்களில் தங்கள் கார்கள் நிறுத்தி இருக்கும் இடத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அப்போது வடிவேலுவை அழைத்து செல்ல வந்த காரில் இசையமைப்பாளர் டிரம்ஸ் சிவமணி தன்னுடைய குடும்பத்தோடு ஏறி அமர்ந்துகொண்டார்.

அவரிடம் வடிவேலுவின் உதவியாளர் சென்று சண்டை போட ‘அவன வெயிட் பண்ண சொல்றா’ என ஒருமையில் பேசியுள்ளார் சிவமணி. இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைந்தார். அவரின் இறுதி அஞ்சலிக்குக் கூட முன்பகை காரணமாக வடிவேலு வரவில்லை. அதனால் அவர் மீது பொதுமக்களுக்கு ஒரு கோபம் இருந்தது. இந்நிலையில் இப்போது வடிவேலுவுக்கு இப்படி ஒரு அவமானம் ஏற்பட்டுள்ளதை அடுத்து விஜயகாந்த் ஆதரவாளர்கள் வடிவேலுவுக்கு இதுவேண்டும் என நகைத்து வருகின்றனர்.