Friday, April 17, 2026
Home > Cinema > அப்போ பொங்கல் வின்னர் துணிவுதானா?…. இரண்டாவது நாளிலும் வசூலில் முன்னணி!

அப்போ பொங்கல் வின்னர் துணிவுதானா?…. இரண்டாவது நாளிலும் வசூலில் முன்னணி!

வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் உருவாகியுள்ள விஜய்யின் வாரிசு திரைப்படம் நேற்று முன் தினம் வெளியாகி மிகவும் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. போட்டிக்கு வெளியான துணிவு திரைப்படம் நல்ல பாசிட்டிவ்வான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று ஒரே ஒரு நாள் முடிந்துள்ள நிலையிலேயே படத்தை ப்ளாக்பஸ்டர் ஹிட் என வாரிசு படக்குழு அறிவித்துள்ளது.

இதே போல மறுபக்கத்தில் வெளியான துணிவு திரைப்படமும் சில எதிர்மறைக் கருத்துகளைப் பெற்றாலும், பெரும்பாலும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இதனால் ரிலீஸ் ஆனது முதல் துணிவு படத்துக்கு ஆதரவு அதிகமாக உள்ளது.

இந்நிலையில் முதல் நாள் முடிவில் இரண்டு படங்களும் தமிழ்நாட்டில் எவ்வளவு கலெக்‌ஷன் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. துணிவு திரைப்படம் 21 கோடி ரூபாய் அளவுக்கும், வாரிசு திரைப்படம் 20 கோடி ரூபாய் அளவுக்கும் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரண்டாம் நாளிலும் வாரிசு திரைப்படத்தின் வசூல் துணிவு திரைப்படத்தை விட குறைவாக உள்ளதாகவே தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இந்த ஆண்டு பொங்கல் வின்னர் துணிவு திரைப்படம்தான் என அஜித் ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துள்ளனர்.