பாலா இயக்கும் வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகுவதாக பாலா தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யா- சிறுத்தை சிஅவா இணைந்து ‘சூர்யா 42’ என தற்காலிகமாக அழைக்கப்படும் படத்தில் இணைந்துள்ளனர். இந்த படம் 10 இந்திய மொழிகளில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திஷா பட்டாணி கதாநாயகியாக நடிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். சமீபத்தில் கோவாவில் இதன் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
இந்த படத்தை முடித்ததும் சூர்யா ஏற்கனவே பாலா இயக்கத்தில் நடித்து பாதியில் நிறுத்தப்பட்ட வணங்கான் படத்தையும், அதன் பிறகு வாடிவாசல் திரைப்படத்தையும் தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது சூர்யா ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்க உள்ளதாக ஞானவேல் கூறியுள்ளார்.
இந்நிலையில் வணங்கான் படத்தின் திருத்தப்பட்ட கதை வடிவத்தை இயக்குனர் பாலா, சூர்யாவுக்கு அனுப்பிவிட்டு அவரின் பதிலுக்காக காத்திருக்கிறாராம். ஆனால் சூர்யா தரப்பில் இருந்து எந்த பதிலும் இதுவரை வரவில்லை என்றும் சொல்லப்பட்டது.
இந்நிலையில் இப்போது பாலா தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் “வணங்கான் கதை மாற்றத்தால் இப்போது சூர்யாவுக்கு அந்த கதை பொருந்தாத சூழல் உருவாகியுள்ளது. அதனால் இந்த படத்தில் இருந்து சூர்யா விலகிக் கொள்கிறார். மற்ற படி வணங்கான் பட வேலைகள் தொடரும்” எனக் கூறியுள்ளார்.
