Friday, June 7, 2024
Home > Cinema > ப்பா என்ன அழகு… கண்ணாடி சேலையில் ஜொலிக்கும் திரிஷா!

ப்பா என்ன அழகு… கண்ணாடி சேலையில் ஜொலிக்கும் திரிஷா!

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக கனவுக்கண்ணியாக வலம் வருபவர் திரிஷா. லேசா லேசா படம் மூலமாக அறிமுகமான அவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என பல மொழிகளில் 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது அவருக்கு பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அவர் நடித்துள்ள குந்தவை கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இதையடுத்து மீண்டும் அவருக்கு படங்கள் வந்து குவிய ஆரம்பித்துள்ளன.

39 வயதாகும் திரிஷா இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஏற்கனவே ஒரு முறை அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்டது. இதையடுத்து கடந்த சில ஆண்டுகளாகவே அவருக்கு சொல்லிக்கொள்ளும் படியான ஹிட் படம் ஒன்றும் அமையவில்லை.

`

இதையடுத்து திரிஷா நடித்து சில ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் இருந்த ராங்கி திரைப்படம் டிசம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. அதற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அவரின் சமீபத்தைய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன.

```
```

தற்போது திரிஷா விஜய்யின் லியோ படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 படம் ரிலீஸ் ஆக வுள்ள நிலையில் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்.

இந்நிலையில் இப்போது சிவப்பு நிற  உடையணிந்து வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன. என்றும் இளமை பொங்கும் திரிஷா என்று ரசிகர்கள் அவரை வாழ்த்தி வருகின்றனர்.