Friday, May 17, 2024
Home > Cinema > இவர்தான் பிக்பாஸ் ப்ரதீப்பின் பிக் பாஸ்… அறிமுகப் படுத்தி வைத்த சுரேஷ் சக்ரவர்த்தி!

இவர்தான் பிக்பாஸ் ப்ரதீப்பின் பிக் பாஸ்… அறிமுகப் படுத்தி வைத்த சுரேஷ் சக்ரவர்த்தி!

தொலைக்காட்சி வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளது தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி. தொடர்ந்து 7 சீசன்களாக நடந்து வரும் பிக்பாஸ் இந்த சீசனில் அவ்வளவாக சூடுபிடிக்கவில்லை. அதனால் செயற்கையாகவே பல பரபரப்புகளை உருவாக்கி வருகின்றனர்.

ஆரம்பத்தில் பவா செல்லத்துரையை அனைவரும் டார்கெட் செய்து வெளியேற்றியது, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி பிரதீப் ஆண்டனியை வெளியேறியது என சர்ச்சைகள் காரணமாக பிக்பாஸ் கவனம் பெற்று வருகிறது.

`

ஆனால் ப்ரதிப் வெளியேற்றப்பட்ட பின்னர் ஜோவிகா “நாங்கள் அப்படி எதுவுமே சொல்லவில்லை. கமல்சார்தான் அப்படி சொல்லி ப்ரதிப்புக்கு ரெட் கார்ட் கொடுத்தார்.” எனப் பேசியுள்ளார். இந்நிலையில் மீண்டும் ப்ரதீப் பிக்பாஸ் வீட்டுக்குள் திரும்ப உள்ளார் என தகவல்கள் வெளியாகின. ஆனால் அதற்கான அறிகுறிகள் எதுவும் இப்போது வரை தெரியவில்லை.

```
```

இந்நிலையில் பிக்பாஸ் முன்னாள் போட்டியாளர் சுரேஷ் சக்ரவர்த்தி. இப்போது ப்ரதீப்பின் கேர்ள் பிரண்ட்டை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். இது சம்மந்தமாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் “நான் ப்ரதீப் ஆண்டனியிடம் பேசினேன்.” எனக் கூறியுள்ளார். மேலும் ப்ரதிப்பின் கேர்ள் ப்ரண்ட்டையும் தன்னுடைய வீடியோவில் அறிமுகப்படுத்தியுள்ளார். இப்போது அவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.