சிவகார்த்திகேயன் இப்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.
சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் தன்னுடைய அபாரமான நகைச்சுவை பேச்சாற்றாலும், திறமையாலும் தமிழ் சினிமாவில் நுழைந்தார். முதலில் நகைச்சுவை வேடத்தில் நடித்த அவர் அதன் பின்னர் கதாநாயகனாகி வெற்றிப் படங்களைக் கொடுத்தார்.
அவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், டாக்டர், டான் ஆகிய திரைப்படங்கள் வியாபார ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. இதனால் ஒவ்வொரு படத்துக்கும் அவரின் மார்க்கெட் மதிப்பு ஏறிக்கொண்டே வந்தது. இந்நிலையில் அவர் முதல் முறையாக தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சத்யராஜ், மரியா, சத்யராஜ் ஆகியோரும் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் விரைவில் உருவாக உள்ள தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜனின் பயோபிக்கில் நடிக்க உள்ளார். இதை நடராஜனே சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் உறுதிப்படுத்தியுள்ளார். சிவகார்த்திகேயன் ஏற்கனவே கனா படத்தில் கிரிக்கெட் வீரராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடராஜன் இந்திய அணிக்காக இன்னும் 10 போட்டிகளுக்கு மேல் விளையாடாவிட்டாலும், தமிழ்நாட்டில் அவருக்கென மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது.
