Friday, May 3, 2024
Home > Cinema > ஒரு வாரத்தில் ஆட்டம் காலி… பிரின்ஸ் இப்ப இத்தன ஸ்க்ரீன்லதான் ஓடுதா?

ஒரு வாரத்தில் ஆட்டம் காலி… பிரின்ஸ் இப்ப இத்தன ஸ்க்ரீன்லதான் ஓடுதா?

சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்துள்ளது.

`

தொடர்ந்து டாக்டர், டான் ஆகிய திரைப்படங்களின் மூலம் வெற்றியைக் கொடுத்த சிவகார்த்திகேயனின் அடுத்தபடமாக கடந்த 21 ஆம் தேதி ரிலீஸானது பிரின்ஸ். இந்த படத்தின் மூலமாக அவர் முதல் முறையாக தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் சத்யராஜ், மரியா, சத்யராஜ் ஆகியோரும் நடித்திருந்தனர். தமன் இசையமைத்திருந்தார்.

```
```

ஆனால் ரிலீஸுக்கு பின்னர் இந்த படம் ரசிகர்களை முற்றிலும் ஏமாற்றியுள்ளது. சுத்தமாக நகைச்சுவை காட்சிகள் எடுபடவில்லை என்று சொல்லும் ரசிகர்கள் விஜய் டிவியில் மதுரை முத்து செய்யும் நகைச்சுவை காட்சிகள் போல மொக்கையாக இருப்பதாகவும் கூறியுள்ளனர். தமிழில் இந்த படத்தை ரிலீஸ் செய்த விநியோகஸ்தருக்கு 10 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் வரும் என்று சொல்லப்படுகிறது. தமிழை விட தெலுங்கில்தான் படத்துக்கு மிகப்பெரிய அளவில் வசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாம். அங்கு நான்கு நாட்களில் அந்த படம் வெறும் 4 கோடி ரூபாய்தான் வசூலாகியுள்ளதாம்.

ரிலீஸாகி இன்னும் முழுதாக 10 நாளைக் கூட கடக்காத நிலையில் இப்போது கிட்டத்தட்ட அனைத்து திரையரங்குகளில் இருந்தும் ப்ரின்ஸ் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. மல்டிப்ளக்ஸ் ஸ்கீரின்களில் மட்டும் 50க்கும் குறைவான திரைகளில் ஓடி வருகிறது. சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய தோல்வியாக பிரின்ஸ் திரைப்படம் அமைந்துள்ளது.