Monday, May 20, 2024
Home > Cinema > அக்கட தேசத்தில் பிரின்ஸ் படத்துக்கு ஆர்வம் காட்டாத ரசிகர்கள்! பின்னணி என்ன?

அக்கட தேசத்தில் பிரின்ஸ் படத்துக்கு ஆர்வம் காட்டாத ரசிகர்கள்! பின்னணி என்ன?

சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் தன்னுடைய அபாரமான நகைச்சுவை பேச்சாற்றாலும், திறமையாலும் தமிழ் சினிமாவில் நுழைந்தார். முதலில் நகைச்சுவை வேடத்தில் நடித்த அவர் அதன் பின்னர் கதாநாயகனாகி வெற்றிப் படங்களைக் கொடுத்தார்.

`

அவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், டாக்டர், டான் ஆகிய திரைப்படங்கள் வியாபார ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. இதனால் ஒவ்வொரு படத்துக்கும் அவரின் மார்க்கெட் மதிப்பு ஏறிக்கொண்டே வந்தது. இந்நிலையில் அவர் முதல் முறையாக தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சத்யராஜ், மரியா, சத்யராஜ் ஆகியோரும் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார்.

```
```

பிரின்ஸ் அக்டோபர் 21 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்நிலையில் வரிசையாக ஹிட் படங்கள் கொடுத்து வரும் நிலையில் இந்த படத்தை ரிலீஸுக்கு முன்பே 100 கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் தெலுங்கில் இந்த படத்துக்கு பெரிதாக ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இல்லை என்று சொல்லப்படுகிறது. அங்கு சிவகார்த்திகேயனுக்கு பெரிதாக மார்க்கெட் இல்லை. ஆனால் இந்த படத்தின் இயக்குனர் அனுதீப்புக்காகதான் இந்த படம் தெலுங்கிலும் உருவாக்கப்பட்டது, இதற்கிடையில் அவர் திரைக்கதை எழுதி வெளியான படம் ஒன்று சமீபத்தில் அட்டர் ப்ளாப் ஆனதால் இந்த படத்தை அங்கு யாருமே கண்டுகொள்ளவில்லையாம்.