Monday, May 6, 2024
Home > Cinema > ரிலீஸுக்கு முன்பே நீக்கப்பட்ட 13 நிமிடக் காட்சிகள்… சிவகார்த்திகேயன் படத்தில் அதிரடி மாற்றம்!

ரிலீஸுக்கு முன்பே நீக்கப்பட்ட 13 நிமிடக் காட்சிகள்… சிவகார்த்திகேயன் படத்தில் அதிரடி மாற்றம்!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் நாளை திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

`

சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் தன்னுடைய அபாரமான நகைச்சுவை பேச்சாற்றாலும், திறமையாலும் தமிழ் சினிமாவில் நுழைந்தார். முதலில் நகைச்சுவை வேடத்தில் நடித்த அவர் அதன் பின்னர் கதாநாயகனாகி வெற்றிப் படங்களைக் கொடுத்தார். அவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், டாக்டர், டான் ஆகிய திரைப்படங்கள் வியாபார ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.

```
```

இந்நிலையில் அவர் முதல் முறையாக தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சத்யராஜ், மரியா, சத்யராஜ் ஆகியோரும் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். பிரின்ஸ் அக்டோபர் 21 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்நிலையில் வரிசையாக ஹிட் படங்கள் கொடுத்து வரும் நிலையில் இந்த படத்தை ரிலீஸுக்கு முன்பே 100 கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படம் நாளை வெளியாக உள்ள நிலையில் இப்போது திடீரென்று 13 நிமிடக் காட்சிகளை படக்குழு நீக்கியுள்ளதாம். ஏற்கனவே படத்தின் நீளம் 2 மணிநேரம் 23 நிமிடம் என அறிவிக்கப்பட்ட நிலையில் இப்போது நீளம் குறைக்கப்பட்டு 2 மணிநேரம் 10 நிமிடமாக குறைத்துள்ளார்களாம். இதனால் படத்தின் மீது ரசிகர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.