Sunday, April 19, 2026
Home > Cinema > சிம்புவின் 50 ஆவது படத்தை இயக்குவது யார்? லிஸ்ட்டில் பிரபல இயக்குனர்கள்!

சிம்புவின் 50 ஆவது படத்தை இயக்குவது யார்? லிஸ்ட்டில் பிரபல இயக்குனர்கள்!

திக்கற்று சென்ற சிம்புவின் சினிமா கேரியரில் திருப்புமுனையாக அமைந்த மாநாடு திரைப்படம் மீண்டும் அவரை உச்சத்துக்கு அழைத்துச் சென்றது. அதன்பிறகு அவர் நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி ரிலீஸானது.

மாநாடு படத்தின் வெற்றியால் மிகப்பெரிய ஹைப் இருந்ததால் ரிலீஸுக்கு முன்பே சேட்டிலைட் மற்றும் ஓடிடி விற்பனை மூலமாக லாபம் பார்த்துவிட்ட தயாரிப்பாளருக்கு திரையரங்கு மூலமாக வந்த தொகை கூடுதல் லாபம்தான்.

இதையடுத்து தனது 48 ஆவது படமான பத்து தல படத்தை சமீபத்தில் முடித்துள்ளார் சிம்பு. இந்நிலையில் தன்னுடைய 50 ஆவது படத்தை இயக்க மிஷ்கின், சுதா கொங்கரா மற்றும் ஏ ஆர் முருகதாஸ் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை மிகவும் பிரம்மாண்டமாக  எடுக்க சிம்பு ஆசைப்படுவதாக சொல்லப்படுகிறது