விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் அடுத்து அட்லி, லோகேஷ் என்ற முன்னணி இயக்குனர்களோடு இணைய உள்ளார்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க, தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு உள்ளிட்ட ஏராளமானோர் நடிக்க, தமன் இசையமைக்கிறார். முதல் முதலாக விஜய் படத்துக்கு தமன் இசையமைக்கிறார்.
இதையடுத்து அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் பாலிவுட்டில் முதல் முதலாக காலடி எடுத்து வைத்துள்ள தனது ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான அட்லிக்காக அவர் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது.
இந்நிலையில் கோமாளி மற்றும் லவ் டுடே ஆகிய படங்களின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் விஜய்க்கு கதை சொல்லியுள்ளதாகவும், எதிர்காலத்தில் அவரோடு இணைந்து பணியாற்ற வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளார்.
