Monday, May 20, 2024
Home > Cinema > பாபிய மாத்துங்க… ஜிகர்தண்டா படத்துல நடிக்கிறேன் – கண்டீஷன் போட்ட சிவகார்த்திகேயன்!

பாபிய மாத்துங்க… ஜிகர்தண்டா படத்துல நடிக்கிறேன் – கண்டீஷன் போட்ட சிவகார்த்திகேயன்!

சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் தன்னுடைய அபாரமான நகைச்சுவை பேச்சாற்றாலும், திறமையாலும் தமிழ் சினிமாவில் நுழைந்தார். முதலில் நகைச்சுவை வேடத்தில் நடித்த அவர் அதன் பின்னர் கதாநாயகனாகி வெற்றிப் படங்களைக் கொடுத்தார். அவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், டாக்டர், டான் ஆகிய திரைப்படங்கள் வியாபார ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.

`

கிட்டத்தட்ட இவரின் இதே காலத்தில் இயக்குனராக வளர்ந்தவர் கார்த்திக் சுப்பராஜ். பீட்சா படத்தில் ஆரம்பித்த அவரின் வெற்றி ரஜினிகாந்தை வைத்து பேட்ட படத்தை இயக்கும் அளவுக்கு வளர்ந்தார்.

```
```

இந்நிலையில் கார்த்திக் சுப்பராஜின் இரண்டாவது படமான ஜிகர்தண்டாவில் சிவகார்த்திகேயனைதான் முதலில் சித்தார்த் நடித்த பாத்திரத்தில் நடிக்க வைக்க விரும்பினாராம். இது சம்மந்தமாக சிவகார்த்திகேயனை சந்தித்து கதை சொன்ன போது “ வில்லன் வேடத்தில் பாபி சிம்ஹாவுக்கு பதில், சத்யராஜ் போன்ற நடிகர்களை நடிக்க வையுங்கள், நான் கண்டிப்பாக நடிக்கிறேன் எனக் கூறினாராம். ஆனால் கார்த்திக் சுப்பராஜ் பாபிய நீக்க மறுத்ததால் பின்னர் சித்தார்த் அந்த படத்தில் நடித்தார்” என்று சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் கார்த்திக் சுப்பராஜ் கூறியுள்ளார்.