Saturday, April 18, 2026
Home > Cinema > பிரேம்ஜி என்னை ஏமாத்திட்டான்… இப்படி பண்ணுவான்னு நெனைக்கவே இல்லை.. பிரபல பாடகி புலம்பல்!

பிரேம்ஜி என்னை ஏமாத்திட்டான்… இப்படி பண்ணுவான்னு நெனைக்கவே இல்லை.. பிரபல பாடகி புலம்பல்!

இயக்குனர் வெங்கட்பிரபுவின் தம்பியும் கங்கை அமரனின் மகனுமான பிரேம்ஜி இசையமைப்பாளர், பாடகர் மற்றும் நடிகர் என பல முகங்கள் கொண்டவர். 45 வயதாகியும் திருமணம் ஆகாமல் இருந்த அவரை ரசிகர்கள் தமிழ் சினிமாவின் முரட்டு சிங்கிள் என அழைத்து வந்தனர்.

எப்போது கல்யாணம் என்று கேட்கும்போதெல்லாம் வாய்ப்பே இல்லை என சொல்லிவந்தார். ஆனால் திடீரென தன்னை விட 20 வயது சிறிய பெண்ணான இந்து என்பவரை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டார். அவர்களின் திருமணம் திருத்தணியில் எளிமையாக நடந்தது.

பிரேம்ஜியை திருமணம் செய்துகொண்டிருக்கும் இந்து என்ற பெண் வங்கியில் ஊழியராக பணியாற்றுகிறாராம். இவர்கள் அறிமுகம் சமூகவலைதளங்கள் மூலமாக நடந்து பின்னர் காதலாக மலர்ந்துள்ளது. இவர்கள் திருமணத்துக்கு இரு வீட்டாரும் அனுமதி அளிக்க எளிமையான முறையில் நடந்துள்ளது.

இந்நிலையில் பிரேம்ஜி திருமணம் குறித்து பேசியுள்ள அவரின் நெருங்கிய தோழியான வினைதா “ஆண்களில் எப்படி ஜெய்யும் பிரேம்ஜியும் முரட்டு சிங்கிள்களாக இருந்தார்களோ அப்படி பெண்களில் நான் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தேன்.

நான் ஜெய்க்குக் கூட திருமணம் நடந்துவிடும், பிரேம்ஜிக்கு எல்லாம் நடக்கவே நடக்காது என நினைத்தேன். இந்து அவனுக்கு ப்ரபோஸ் பண்ணும் போது நான்தான் எப்படி அவளுக்கு ரிப்ளே செய்யவேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொடுத்தேன். அதெல்லாம் அப்படியே முடிந்துவிடும். அடுத்த கட்டத்துக்கு செல்லாது என நினைத்தேன்.

ஆனால் இப்படி கல்யாணம் பண்ணிக்கொண்டு சமையல் கட்டு வரை செல்வான் என்றெல்லாம் எனக்கு தெரியவில்லை. இப்படி கல்யாணம் பண்ணிக்கொண்டு பிரேம்ஜி எங்களை ஏமாற்றிவிட்டான்” என புலம்பித் தள்ளியுள்ளார்.